தேன் – தேனீக்கள் பற்றி இவ்வளவு சுவாரஸ்யமான விடயங்கள் இருக்கிறது தெரியுமா ?

53

தேனீக்கள் குடும்பம் குடும்பமாக வாழும் ஈக்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு தலைவி அதுதான் ராணீத் தேனீ. ராணீத் தேனீ குடும்பத்தில் உள்ள மற்றவர்களை விட உருவத்தில் பெரியது. பணியாளைப் போல் இரு மடங்கு நீளத்தில் இருக்கும்.

இருமலை அடக்கும் மிட்டாய்கள் பேக்கெட்டின் மீதுள்ள வாசகங்களையோ இருமலுக்கு சாப்பிடும் மருந்து பாட்டிலின் மீதுள்ள வரிகளையோ படித்துப் பார்த்தால் அதில் தேனும் கலந்திருப்பது தெரியும்.ஆயுர்வேதத்திலோ சித்த வைத்தியத்திலோ பார்த்தாலும் தேனுக்கு ஒரு முக்கிய இடம் இருப்பது புரியும்.இப்படி நற்குணங்களையும் நல்ல மதுரமான ருசியையும் கொண்ட தேனை நமக்கு அளிப்பது ஒரு வகை ஈ. அது தான் தேனீ.

உலகிலேயே மிக உன்னதமான ஒரு உணவுப் பொருள் தேன்.

அது எவ்வளவு நாட்கள் வெளியில் வைத்திருந்தாலும் கெட்டுவிடாது. புளிக்காது. பூஞ்சக் காளான் பிடிக்காது. தேன் உணவுப் பொருள் மட்டுமல்ல. மருந்தும் கூட.

குழந்தைக்கு ஜுரம். டாக்டர் மாத்திரை எழுதிக் கொடுக்கிறார். கூடவே சொல்கிறார், மாத்திரையை பொடி செய்து தேனில் கலந்து நாக்கில் தடவி விடுங்கள் என்று. குழந்தைகளை மாத்திரை விழுங்க வைப்பதே கஷ்டம் அதிலும் கசப்பு மாத்திரை என்றால் கேட்கவே வேண்டாம். டாக்டர் சொன்னபடி செய்வதில் இரண்டு சௌகரியங்கள். தேனின் தித்திப்பு மாத்திரையின் கசப்பை மறைத்து விடும். கூடவே தேனும் மருந்தாகும்.

தேனி இனத்தில் ராஜாக்கள் பலர் உண்டு. இவர்கள் நிறத்தில் பணி ஆட்களை விடக் கருப்பாக இருப்பார்கள். ராஜாக்களின் வேலை உண்பது, உறங்குவது, இனப் பெருக்க காலத்தில் ராணியோடு உடலுறவு கொள்ளுதல் இவைதான். ராஜாவிடம் ஆயுதமும், அதான், கொடுக்கும் கிடையாது.

மூன்றாவது குடும்ப அங்கத்தினர்கள் ஆணுமல்லாது பெண்ணுமல்லாது மூன்றாம் பால் ஆன வேலைக்கார தேனீக்கள்.மெழுகு கொண்டு தேன் அடையைக் கட்டுதல், கட்டிய அடையின் அறைகளில் மலர்களில் இருந்து சேகரித்து வந்த தேனையோ, ராணி முட்டைகள் இட்டிருந்தால், தன் கால்களில் மலர்களில் இருந்து சேகரித்து வந்த மகரந்தத் துகள்களைத் தேனோடு சேர்த்துக் குழைத்து முட்டைகளிலிருந்து வெளி வரும் புழுக்களுக்கு உணவாக வைத்துப் பின் முட்டையில் இருந்து மூன்று நான்கு நாட்களில் புழுக்கள் வெளி வந்தவுடன் அறைகளை மூடுவது போன்ற எல்லா வேலைகளையும் செய்வது இந்த மூன்றாம் பால் வேலைக்காரர்கள்தான்.

இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள் தேனில் உண்டு !

 

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...