அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிக்குமா சுதந்திரக் கட்சி

13

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா என்பது குறித்த தீர்மானம் மிக்க முக்கிய கலந்துரையாடல் ஒன்றை இன்றைய தினம் நடத்த உள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (17) இடம்பெற உள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்சியின் வளர்ச்சிக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக இதன்போது ஆராயப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய அரசாங்கத்தில் இருந்து விலகிய அந்தக் கட்சியின் 16 உறுப்பினர்களும் கட்சியின் வளர்ச்சிக்காக சில யோசனைகளை முன்வைக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார்.

அதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என்று இதற்கு முன்னர் மத்திய செயற்குழு கூட்டத்தில் முன்வைத்த யோசனை சம்பந்தமாகவும் இதன்போது ஆராயப்பட உள்ளதாக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...