முகநூல் நிறுவனம் 200 செயலிகளுக்கு தடை விதித்துள்ளது

14

ஃபேஸ்புக்கை சார்ந்து செயற்படும் 200 செயலிகளுக்கு அந்நிறுவனம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களைத் திருடி தேர்தலில் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டதாக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து, பயனர்களின் தகவல்களைப் பாதுகாக்க உறுதிபூண்ட ஃபேஸ்புக் நிறுவனம், அதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது.

இதன் ஒரு பகுதியாக தகவல்களைத் திருடி தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், ”மை பர்சனாலிட்டி” செயலி உள்ளிட்ட 200 செயலிகளுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் உண்மை என கண்டறியப்பட்டால் செயலிகள் நிரந்தரமாக தடை செய்யப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் எச்சரித்துள்ளது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...