பனிகாலங்களின் மிக மிக கவனமாய் இருங்கள் !

40

பனிகாலங்களில் முகம் மற்றும் உடல் முழுக்க வெடிப்புகள் சொர சொரப்புகள் காணப்படும் இதனை போக்குவதற்கு பல்வேறு கிருமிகள் மற்றும் ஒயில்கள் மூலம் சரிசெய்ய முனைந்தாலும் அவை பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் இவ்வாறான சரும பிரச்சினைகளுக்கு உங்கள் வீட்டிலேயே என்றாடம் அளவுக்கும் பொருட்களிலேயே மருந்து இருக்கிறதென்றால் நம்புவீர்களா ? வாருங்கள்

           மிகவும் வறண்ட சருமக்காரர்களுக்கு பனிக்காலத்தில் தோலில் அரிப்பு, வெடிப்பு போன்றவை ஏற்படலாம். இவர்கள் தினமும் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து தேய்த்துக் குளித்து வரவேண்டும்.

வறண்ட சருமக்காரர்கள், பப்பாளி, ஆப்பிள் போன்றவற்றைத் தவறாமல் சாப்பிட் வேண்டும்

பாலாடையுடன் கசகசாவை ஊற வைத்து அரைத்து முகம் மற்றும் கை, கால்களில் பூசி, சிறிதுநேரம் கழித்து குளிப்பதும், சருமத்தை மென்மையாக்கும்.

பாலாடையுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகம், கை, கால்களில் தேய்த்து ஊறிய பிறகு குளித்தால் வறண்ட சருமம் பொலிவு பெரும்.

பனிக் காலத்தில் உடலுக்கு கடலை மாவு, பயத்தம் மாவு தேய்த்துக் குளிக்கக்கூடாது. அது சருமத்தில் இருக்கும் கொஞ்சநஞ்ச எண்ணெய்ப் பசையையும் உறிஞ்சிவிடும்.

பனிக்காலங்களில் தோல் நோய்கள் வராமல் இருக்க வேண்டுமானால், மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

அரை கிலோ துவரம் பருப்பு, 100 கிராம் பயத்தம் பருப்பு, 25 கிராம் கசகசா, 100 கிராம் கஸ்தூரி மஞ்சள் இவற்றை மெல்லிதாக அரைத்துகொள்ளவும். இந்த கலவையை தினந்தோறும் முகம் முதல் பாதம் வரை தேய்த்து குளிக்கவும். தொடர்ந்து இவ்வாறு 1 மாதம் செய்துவந்தால் தோலின் வறட்டுத்தன்மை நீங்கி மிருதுவாக ஜொலிக்கும்.

 

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...