இனிமேல் கிரிக்கெட்டில் நாணய சுழட்சி முறை இல்லை !

CHRISTCHURCH, NEW ZEALAND - FEBRUARY 20: Brendon McCullum of New Zealand and Steve Smith of Australia at the coin toss during day one of the Test match between New Zealand and Australia at Hagley Oval on February 20, 2016 in Christchurch, New Zealand. (Photo by Ryan Pierse/Getty Images)
61

கனவான்களின் விளையாட்டு என புகழ்பெற்ற விளையாட்டு கிரிக்கெட் இந்த விளையாட்டு பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மாற்றங்களை சந்தித்து இன்றும் பலகோடி ரசிகர்களை கொண்டதும் பலகோடி வருமானம் தரகூடியதுமான விளையாட்டாக இருந்து வருகிறது

கிரிக்கெட் தொடங்கிய காலத்தில் இருந்தே கடைபிடிக்கப்பட்டு வரும் மரபான நாணய சுழட்சி போடும் நடைமுறைக்கு முடிவு கட்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆலோசித்து வருகிறது.

2019ம் ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்பட உள்ளது. அப்போது இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படும் என தெரிகிறது. அதற்கு முன்பாக, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் தொடரில் டாஸ் முறையை ஒழித்து கட்டுதலை சோதனை முயற்சியாக மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 1877ம் ஆண்டு இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றைய தினத்திலிருந்து, நாணய சுழட்சி போடும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

வழக்கமாக உள்ளூர் அணியின் கேப்டன், நாணயத்தை சுண்டி விட, எதிரணி வீரர் ஹெட் அல்லது டெய்ல் கேட்பார். அதில் வெற்றி பெறுபவர் பேட்டிங்கா, பீல்டிங்கா என்பதை தேர்வு செய்வார்கள்.

கிரிக்கெட் போட்டிகளில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு உள்ளூரில் நடக்கும் போட்டிகளில் தங்கள் அணிக்கு சாதகமாக ஆடுகளத்தை அமைத்துக் கொள்கிறார்கள். மேலும், சொந்த மண்ணில் விளையாடும் அணிக்கு நிறைய சாதகமான அம்சங்கள் இருப்பதால், பொதுவாக எதிரணிகளே திணறுகின்றன.

இதனால், நாணய சுழட்சி முறைக்கு முடிவு கட்டி, எதிரணியே துடுப்பெடுத்தாட செய்வதா, பந்து வீசுவதா என்பதை நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறையை கொண்டு வர ஐசிசி பரிசீலித்து வருகிறது.

இதுதொடர்பாக சமீபத்தில் மும்பையில் நடந்த ஐசிசி கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...