ஆண்கள் மட்டும் படியுங்கள்! குறிப்பாக காதலன், கணவனுக்கு மட்டும் !

45

அதிகமாக பெண்கள் கோபப்படுவதே தன் மீது யாரும் அக்கறை கொள்ளாத சந்தர்ப்பங்களில் தான்.முடியுமான அளவு மனைவியின் தேவைகளை புரிந்து அதனை பூர்த்தி செய்யுங்கள்.

மனைவி அதிகமான கோபத்தை உங்கள் மீது வெளிக்காட்டும் போது, உங்களுக்கும் கோபம் ஏற்படும் அவ்வாறான நேரங்களில் நீங்கள் உங்கள் மனதை கட்டுப்படுத்த வேண்டும்.

கோபப்பட்டு தகாத வார்த்தைளை பிரயோகப்படுத்த கூடாது அது அவரின் மனதை வெகுவாக பாதிக்கக்கூடும்.

மனைவி கோபப்படும் போது, நீங்கள் உங்களது வேலையை கவனித்து கொண்டிருந்தால் அது ‘எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல” கணவன் தனது கோபத்தை கண்டுகொள்ளவில்லை என அவர்களின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தும்

உங்கள் மனைவியின் கோபத்தை எவ்வாறு தணிப்பது என சிந்தியுங்க

பெண்களின் கோபம் எரிமலையைப் போல, ஆண்களின் கோபம் புகையைப் போல என்று கூறுவார்கள்.

சில சமயங்களில் உங்கள் மனைவியின் கோபம் அர்த்தமில்லாததாக இருந்தால் உடனே பதில் எதுவும் கூறாமல் சிறிது நேரத்தின் பின் அமைதியான பிறகு அன்பாக சொல்லி புரிய வையுங்கள்.

ஆண் என்ற முனைப்போடு அதிகமாக பேசாமல், அந்த தருணத்திற்கு ஏற்றாற்போல் மனைவிக்கு விருப்பமான விடயங்களை கூறி அவரை வேறு திசைக்கு மாற்ற முயற்சியுங்கள்.

நீங்கள் செய்த செயலுக்கு எக்காரணம் கொண்டும் காரணம் சொல்ல நினைக்காதீர்கள், அது பெண்களின் கோபத்தை இன்னும் அதிகமாக்கும்.

சிறிது நேரம் அமைதியாக இருங்கள் அவரது கோபம் நியாமற்றது என சுட்டிக்காட்ட முயற்சிக்க வேண்டாம்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...