Take a fresh look at your lifestyle.

ஆண்கள் எட்டு அவயங்களும் பெண்கள் தன் 5 அவயங்களும் நிலத்தில் பட விழுந்து வணங்க வேண்டும்- சிவ வழிபாடு…

1 சிவாலயத்திற்கு செல்லும்போது தூய்மையான உடைஅணிந்து, வீபுதி பூசிக்கொண்டு, சிவ பாராயனங்களை மனதில் நினைத்துச் செல்ல வேண்டும்.

2 சிவன் லிங்கமாக வீற்றிருப்பார். சிவ கோபுரத்தை தூல லிங்கம் என்பார்கள். எனவே இரண்டு கைகளையும் தலை மேல் குவித்து முதலில் கோபுர தரிசனம் செய்ய வேண்டும்.

3 அதையடுத்து பலிபீடத்தின் முன்பாக வீழ்ந்து வணங்க வேண்டும். கிழக்கு அல்லது மேற்கு நோக்கிய திருக்கோயில் என்றால் வடக்கு நோக்கியும், வடக்கு அல்லது தெற்கு நோக்கிய கோயில் என்றால் கிழக்கிலும் தலை வைத்து வணங்க வேண்டும்.

4 ஆண்கள் தங்கள் எட்டு அவயங்களும் நிலத்தில் தோய வீழ்ந்து வணங்க வேண்டும்.  எட்டு அவயங்கள் என்பது தலை 2 கைகள், 2 செவிகள், மேவாய், 2 புயங்கள். இரு செவிகளும் நிலத்தில் பட வேண்டும் என்றால் தலையை இரு பக்கமும் திருப்பி நிலத்தில் படுமாறு வணங்க வேண்டும்.

5 பெண்கள் ஐந்து அவயங்களும் நிலத்தில் தோய வீழ்ந்து வணங்க வேண்டும். ஐந்து அவயங்களும் தலை, 2 கைகள், 2 முழந்தாள்.

6 வீழ் வணக்கத்திற்கு பிறகு இரு கரங்களையும் மார்பின் மேல் குவித்து, சிவனை எண்ணிக்கொண்டே திருக்கோயில் சுற்றினை மூன்று முறை வலம் வர வேண்டும். 5, 7, 9 எண்ணிக்கையிலும் வலம் வரலாம்.

ஈசனே சுவாசமாய்..
பற்றினேன் உன்னை
பகலிறவாய் மகேஷ்வரா உம் திருவடியே
திருச்சிற்றம்பலம்..

error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...