Take a fresh look at your lifestyle.

உடல் எடையைக்குறைக்கும் ஆரஞ்சு!

அரஞ்சுப் பழத்தில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இது உடல் எடையைக் குறைக்க நினைப்போர்க்கு உகந்த பழவகையாகும்.ஆரஞ்சுப் பழத்தின் நார்ச்சத்தானது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.ஆரஞ்சு பழத்தில் லெமோனாய்டுகள் என்னும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இந்த பழத்தை சாப்பிட்டால், பல வகையான புற்றுநோய்கள் வருவதை தடுக்கலாம்.

ஆரஞ்சுப்பழம் பல் சொத்தையை தடுப்பதோடு பாலில் உள்ள கல்சியம் சத்தையும் வழங்குகின்றது.ஆரஞ்சுப்பழச் சாற்றில் சிறிது சுடுநீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.ஆரஞ்சுப்பழச்சாறு நோய்க்கிருமிகளை அழிக்கும் சக்தியை கொண்டது.ஆரஞ்சு பழச்சாறில் உள்ள சுண்ணாம்பு சத்து நெஞ்சு வலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய் போன்ற நோய்கள் குணப்படுத்துகிறது.

இரத்த சோகை, நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ளவர்களின் உன்னத உணவாக செயல்பட்டு புது இரத்தம் உற்பத்தி செய்கிறது.வெய்யில் காலத்தில் உண்டாகும் அக்கி, தோல் வியாதிகள், மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்றவைகளில் இருந்து உடனடி நிவாரணம் தருகிறது. மேலும் வயிற்று வலி, ஜீரணக் கோளாறு, வயிற்றுப்போக்கை உடன் சரிசெய்கிறது.

error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...