Take a fresh look at your lifestyle.

நூறு பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினாரா பிரபல ஹோலிவூட் அதிபர்?

66 வயதான பிரபல ஹாலிவுட் பட அதிபர் ஹார்வி வெயின்ஸ்டீன். ஏஞ்சலினா ஜோலி, சல்மா ஹாயெக், ஆஷ்லே ஜூட் போன்ற ஹாலிவூட் பிரபல நாடிகைகள் 100-க்கும் மேற்பட்டோர் பாலியல் குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக சுமத்தி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

இந்த நிலையில், அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வதற்காக கடந்த வாரம் நியூயார்க் போலீசில் சரண் அடைந்தார். பின்னர் 1 மில்லியன் டாலர் ரொக்க ஜாமீனில் வெளியே வந்தார்.

அதைத் தொடர்ந்து இப்போது அவர் மீது கற்பழிப்பு, பாலியல் குற்றச்செயல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மேன்ஹட்டன் மாவட்ட அட்டார்னி சைரஸ் வான்ஸ் ஜூனியர் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “ஹார்வி வெயின்ஸ்டீன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்து இருப்பது, அவர் செய்த பாலியல் குற்றச்செயல்களுக்கு பொறுப்பேற்க வைக்கிற அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளது” என்று கூறினார்.

ஹார்வி வெயின்ஸ்டீன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. கோர்ட்டு விசாரணை அடுத்த மாதம் (ஜூலை) 30-ந் தேதி நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...