Take a fresh look at your lifestyle.

அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன் வைத்தியசாலையில்

பாடசாலை அதிபர் ஒருவரினால் தாக்கப்பட்ட மாணவன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

பலாங்கொடை – ஏகொடவலேகொடவிலுள்ள பாடசாலையொன்றில், அதிபரின் தாக்குதலுக்குள்ளான மாணவரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (01) குறித்த மாணவனை பாடசாலையின் அதிபர் கன்னத்தில் அறைந்துள்ளமையால், கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாணவன் உடனடியாக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பின்னவல பொலிஸாரால் மேற்கொண்ட விசாரணையையடுத்து, குறித்த மாணவன் தரப்பில் எந்தவிதமான முறைப்பாடுகளும் முன்வைக்கவில்லையென தெரிவித்துள்ளனர்.

error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...