Take a fresh look at your lifestyle.

யூடியூப்பின் புதிய வசதி பற்றி வாருங்கள் தெரிந்துகொள்வோம்

கூஃகிள் (Google), டிஜிட்டல் நன்மையினை கருத்தில் கொண்டு, தொழில்நுட்பத்தால் ஏற்படும் கவனச் சிதறல்களைத் தவிர்க்க (less distracted by technology) உதவுகிறது. இதன் முன்முயற்சி அடையாளமாக யூட்டியூபில்-வீடியோக்கள் பார்ப்பதனை நிறுத்தம் செய்வதற்கான நினைவூட்டல்கள் YouTube இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஆம்: யூடியூப்பை பார்ப்பதை நிறுத்த YouTube இப்போது உதவும். இருப்பினும், இயல்புநிலையில் இந்த அம்சம் இயங்காது என்றாலும் இது ஒரு நல்ல சைகை ஆகும். உங்கள் ப்ரோஃபைல் ஐகானைத் தட்டுவதன் மூலம் நினைவூட்டல்களைப் பெறலாம். முதலில் ப்ரோஃபைல் ஐகான், பின்னர் Settings > General > Remind me to take a break. . ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் அல்லது ஒவ்வொரு 3 மணிநேரத்திற்கும் இடையில் நீங்கள் நினைவூட்டல்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

மேலும் சில பயனுள்ள மாற்றங்களையும் கூஃகிள் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பிட்ட நேரங்களில் (தூங்கும் நேரங்களில்) அறிவிப்புச் சத்தத்தினை முடக்கம் செய்யும் (disable notification sounds) அம்சமும் உள்ளது .

இத்தகைய அம்சங்கள் இதுவரை அனைத்து கருவிகளிலும் செயல்படுத்தப்படவில்லை. சிறு மாற்றங்களே, ஆதலினால் குறுகிய காலத்தில் அனைவரும் இந்த YouTube நினைவூட்டல்களைப் பெறலாம்.

error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...