ஐ.பி.எல் வெற்றியின் பின்னர் டோனி செய்த காரியம்

35

ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் அமைந்துள்ளது தியோரி கோவில். இங்குள்ள துர்கா மாதா மிகவும் சக்தி வாய்ந்தவர். இந்திய அணியின் முன்னாள் தலைவர் டோனி இந்த கோவிலின் அதிதீவிர பக்தர்.

சமீபத்தில் நடைபெற்ற 11 வது ஐபிஎல்தொடரில் இரண்டு ஆண்டுகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவரான மகேந்திர சிங் டோனி, திடீரென தியோரி கோவிலுக்கு சென்றார்.

அங்குள்ள துர்க்கை அம்மனை வழிபட்ட அவர், தேங்காய் உடைத்து காணிக்கை செலுத்தினார். அதன் பின்னர், சாமி தரிசனம் செய்து வந்ததும், அங்கு காத்திருந்த தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...