143000 கிலோ மீற்றர் கடந்து ரஸ்யாவை அடைந்த உலகக் கிண்ணம்

33

உலக கிண்ண கால்பந்து தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடந்த 2014 இல் இத்தொடர் பிரேசிலில் நடந்தது. இதில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த ஆண்டுக்கான தொடர் வரும் ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை ரஷ்யாவில் நடைபெறுகிறது.

சுமார் 32 அணிகள் பங்கேற்கும் 64 போட்டிகளை கொண்ட இத்தொடர் ரஷ்யாவின் 11 முக்கிய நகரங்களில் நடக்கிறது. இதன் இறுதிப்போட்டி மொஸ்கோவின் லுஸ்நிகி மைதானத்தில் ஜூலை 15 ஆம் திகதி நடக்கவுள்ளது.

ஒவ்வொரு முறை உலக கிண்ண கால்பந்து தொடர் தொடங்குவதற்கு முன் 36 செண்டி மீட்டர் உயரம் கொண்ட உலக கிண்ண, உலகை சுற்றி எடுத்து வரப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான சுற்றுப்பயணம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி தொடங்கியது.

அந்த கிண்ணமானது ஆறு கண்டங்களில் சுமார் 50 நாடுகளில் சுமார் 1,43,000 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து ரஷ்யா வந்தடைந்தது. தற்போது ரஷ்யாவில் உள்ள நகரங்களை சுற்றி வருகிறது. இந்த பயணம் நாளையுடன் முடிகிறது. அதன்பின் இறுதிப்போட்டி நடைபெறும் லுஸ்நிகி மைதானத்தில் கிண்ண பாதுகாப்பாக வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...