இன்றைய ராசி பலன்கள்…!

18

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும்
ராசிகள்
மேஷம் 09-06-2018 இரவு 11.15
மணி முதல் 12-06-2018 அதிகாலை 02.41 மணி வரை.
ரிஷபம் 12-06-2018 அதிகாலை 02.41 மணி முதல் 14-06-2018
அதிகாலை 03.26 மணி வரை.
மிதுனம் 14-06-2018 அதிகாலை 03.26 மணி முதல் 16-06-2018
அதிகாலை 03.23 மணி வரை.
கடகம் 16-06-2018 அதிகாலை 03.23 மணி முதல் 18-06-2018
அதிகாலை 04.21 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
10.06.2018 வைகாசி 27 ஆம் தேதி
ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதி
அசுவினி நட்சத்திரம் சித்தயோகம்
காலை 08.30 மணி முதல் 10.00
மணிக்குள் கடகம் இலக்கினம்.
தேய்பிறை
இன்றைய ராசிபலன்
6/9/2018

மேஷம்

மேஷம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப்போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வாகனம் பழுதாகும். இரவு 8.10 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் பொறுமைத் தேவைப்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: உற்சாகமாக இருப்பீர்கள். சுறுசுறுப்பாக பல வேலைகள் செய்து முடிப்பீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.

மிதுனம்

மிதுனம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மதிப்புக் கூடும் நாள்.

கடகம்

கடகம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர் களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள் வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

சிம்மம்

சிம்மம்: இரவு 8.10 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத்தூக்கும். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். விட்டுக்கொடுத்து போக வேண்டிய நாள்.

கன்னி

கன்னி: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். இரவு 8.10 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்லும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப்பதவியில்i இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

தனுசு

தனுசு: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்

மகரம்: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். அரசால் ஆதாயம் உண்டு. மனதிற்கு இதமான செய்திகள் வரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கும்பம்

கும்பம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். அழகு, இளமைக் கூடும். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மீனம்

மீனம்: இரவு 8.10 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...