இந்திய நேபாள இராணுவத்தினர் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்

32

உத்தரகாண்ட் மாநிலம் பிதோரகார் பகுதியில் இந்தியா-நேபாள ராணுவ வீரர்கள் இணைந்து 4-வது நாளாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா மற்றும் நேபாளம் நாட்டின் ராணுவத்தினர் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, உத்தரகாண்ட் மாநிலம் பிதோரகார் பகுதியில் சூரிய கிரண் என்ற பெயரில் கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்று வருகிறது. பயங்கரவாத தடுப்பு முயற்சியை இருநாடுகளும் தீவிரப்படுத்துவதே இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம் ஆகும்.

இன்று நான்காவது நாளாக இந்தியா-நேபாள ராணுவ வீரர்கள் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மலை உச்சியில் உள்ள ஹெலிபேடு தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் ரோந்து சென்று கண்காணிப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதேபோல் கரடுமுரடான மலைப்பாதைகளில் வீரர்கள் ஒத்திகை மேற்கொண்டனர்.

பயிற்சியில் இந்தியா மற்றும் நேபாளம் சார்பில் தலா 300 ராணுவ வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஊருடுவல் முயற்சி முறியடிப்பு, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை தொடர்பான தங்கள் அனுபவங்களை பரஸ்பரம் பரிமாறிக்கொள்கின்றனர்.

இந்த ராணுவ பயிற்சி ஜூன் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் மூலம் இருநாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க முடியும். குறிப்பாக மலைப்பிரதேசங்களில் நடைபெறும் பயங்கரவாத செயல்களை கட்டுக்குள் வைக்க முடியும் என இந்திய ராணுவம் கூறியுள்ளது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...