காணாமற்போனோருக்கான அலுவலகத்தின் அடுத்த கூட்டம் திருகோணமலையில்…

24

காணாமற்போனோருக்கான அலுவலகத்தினரின் அடுத்த சந்திப்பொன்று, எதிர்வரும் 13 ஆம் திகதியன்று, காலை 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணிவரையில் திருகோணமலையிலுள்ள இந்து கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த மாதம் மன்னார், மாத்தறை மற்றும் முல்லைத்தீவில் சந்திப்பு ,டம்பெற்றதையடுத்து, இம்முறை திருகோணமலையில், காணாமாற்போனோருக்கான அலுவலத்திலிருந்து விசேடமாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுடன், இடம்பெறவுள்ளதாக மேற்படி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த சந்திப்பின்போது, காணாமற்போனோருக்கான அலுவலகத்தின் நியமனத் திட்டங்கள் மற்றும் மூலோபாயங்கள் தொடர்பிலும் மக்களுக்கு தெளிவூட்டல்கள் வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...