2.0 திரைப்பட வெளியீடு மீளவும் ஒத்தி போகக்கூடிய சாத்தியம்

46

ரஜினி நடிப்பில் காலா படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் 2.0 படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போக உள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய ஹகாலா’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ரஜினி தற்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் பிசியாகியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சனிக்கிழமை டார்ஜிலிங்கில் துவங்கிய நிலையில், படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 2.0 படம் வருகிற ஆகஸ்டில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போக உள்ளதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், கிராபிக்ஸ் பணிகளால் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப்போய் வருகிறது. 2.0 ரிலீஸ் தள்ளிப்போனதால், காலா படம் ரிலீசாகியது.

இந்த நிலையில், 2.0 படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகி இருப்பதாக வெளியான தகவலால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஷங்கர் இயக்கத்தில் ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் ஏமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...