எரிபொருள் விலையேற்றத்தினால் மக்கள் அதிருப்தி

38

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்குள் கொண்டு வந்தால் விலை குறையும் என்றும் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும் பெட்ரோல், டீசல் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே, ஜிஎஸ்டி வரம்புக்குள் எரிபொருளைக் கொண்டு வந்தால் பெட்ரோல் டீசல் விலை குறையும். எரிபொருள் விலையை லிட்டருக்கு 5 முதல் 7 ரூபாய் வரை குறைக்க முடியும்.

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நடந்தாலும் ரொக்கப் பரிமாற்றத்தை தடுக்க முடியாது. இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப விவசாயிகளின் வருமானத்தில் ஏற்றம் இல்லை, இவ்வாறு அவர் கூறினார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...