வாட்ஸ் அப்பின் பீட்டா செயலி

49

வாட்ஸ்-அப் செயலியின் புதிய அப்டேட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து காணலாம்.

வாட்ஸ்-அப் செயலி ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன்(Android Beta Version) 2.18.179 என்ற பெயரில் வந்துள்ளது.

இந்த அப்டேட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சம், சாதாரண மெசேஜ்(Normal Message) மற்றும் ஃபார்வேர்ட் மெசேஜ்(Forward Message) இடையே வேறுபாட்டை காண்பிக்கிறது. அதாவது ஒரு மெசேஜ் ஃபார்வேர்ட் செய்யப்பட்டிருந்தால், அதன் அருகே ‘forwarded’ என்ற லேபிள் இடப்பட்டிருக்கும்.

இந்த ’forwarded’ லேபிள் மெசேஜ் அனுப்பியவருக்கும், அதைப் பெற்றவருக்கும் தெரியும். இந்த அப்டேட் ஆண்ட்ராய்டில் வாட்ஸ்-அப் பீட்டா வெர்ஷனை பயன்படுத்துவோருக்கும் மட்டும் வெளியாகியுள்ளது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...