Take a fresh look at your lifestyle.

காணாமல் போன குழந்தைகளை கண்டு பிடிக்க புதிய மொபைல் ஆப்

Get real time updates directly on you device, subscribe now.

காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிக்கும் நோக்கில் புதிய மொபைல் ‘அப்ளிகேஷன்’ ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

நம் நாட்டில், ஆண்டுதோறும் பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகள் காணாமல் போகின்றனர். இவர்களில் பலரை, கண்டு பிடிக்க முடிவதில்லை. இந்நிலையில், காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கவும், அவர்களை பெற்றோருடன் சேர்த்து வைக்கவும், மொபைலில், புதிய, ‘ஆப்’ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.டில்லியில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், மத்திய வர்த்தக அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, சுரேஷ் பிரபு, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவரும், நோபல் பரிசு பெற்றவருமான, கைலாஷ் சத்யார்த்தி ஆகியோர், புதிய ஆப்பை அறிமுகப்படுத்தினர்.நிகழ்ச்சியில், அமைச்சர் சுரேஷ் பிரபு பேசுகையில், ”காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்து, அவர்களை பெற்றோருடன் சேர்த்து வைக்க, இந்த, ‘ஆப்’ பெரும் உதவியாக இருக்கும்,” என்றார்.கைலாஷ் சத்யார்த்தி பேசுகையில், ”குழந்தைகள் காணாமல் போவது, அவர்களது பெற்றோருக்கு பெரும் துயரமாக அமைகிறது. அவர்களது வாழ்க்கையே சூனியமாகிவிடுகிறது,” என்றார்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:டில்லி போலீசிடம் உள்ள காணாமல் போன குழந்தைகள் பற்றிய விபரங்களுடன், இந்த, ‘ஆப்’ இணைக்கப்பட்டிருக்கும். இதில், குழந்தைகளின் புகைப்படங்களையும், விபரங்களையும், ‘அப்லோட்’ செய்யலாம்.கண்டுபிடிக்கப்படும் குழந்தைகளின் முக அடையாளங்களுடன், ‘ஆப்’ பில் உள்ள முக அடையாளங்களை ஒப்பிட்டு பார்த்து, உறுதி செய்யலாம். அவர்களின் பெற்றோரின் விபரங்களையும் ஆய்வு செய்து, அவர்களை குடும்பத்தடன் சேர்ப்பது எளிதாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments are closed.

error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...