Take a fresh look at your lifestyle.

கடவுள் இருப்பதனை நிரூபித்தால் அதிபர் பதவியை ராஜினாமா செய்வேன்

Get real time updates directly on you device, subscribe now.

கடவுள் இருப்பதை யாரேனும் நிரூபித்தால், அடுத்த வினாடியே, என் அதிபர் பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன்,” என, பிலிப்பைன்ஸ் அதிபர், ரோட்ரிகோ டூர்ட்டே, 73, தெரிவித்துள்ளது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிய நாடான, பிலிப்பைன்ஸ் அதிபராக இருப்பவர், ரோட்ரிகோ டூர்ட்டே. இவர், சமீப காலமாக, கடவுள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று, பிலிப்பைன்சில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே கூறியதாவது:

கடவுள் இருக்கிறார் என்ற கருத்து, எங்கிருந்து வந்தது; கடவுள் இருக்கிறார் என்பதற்கு, ஏதாவது ஒரு சிறிய ஆதாரத்தைக் காட்டுங்கள் அல்லது புகைப்படத்தை வெளியிடுங்கள். மனிதனால், கடவுளிடம் பேச முடிந்தாலோ அல்லது பார்க்க முடிந்தாலோ, அதிபர் பதவியை உடனே ராஜினாமா செய்து விடுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டேவின் பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரமும், இது போன்ற சர்ச்சை கருத்தை, அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே கூறியது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...