Take a fresh look at your lifestyle.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நடிகரின் செல்பி

Get real time updates directly on you device, subscribe now.

கலவரத்தின் போது கொல்லப்பட்ட மாணவன் இல்லத்திற்கு ஆறுதல் கூற சென்ற நடிகர் சுரேஷ் கோபி, செல்பி எடுத்து மகிழ்ந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிமன்யூ,24, கல்லூரி மாணவரான இவர் வட்டவாடா கிராமத்தில் இருபிரிவினரிடையே நடந்த மோதலில் கொலை செய்யப்பட்டார்.

மாணவர் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதற்காக பா.ஜ. எம்.பி.யும் மலையாள நடிகருமான சுரேஷ் கோபி, பா.ஜ. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருடன் வந்தார். பின்னர் அங்கிருந்த கிராமத்தினருடன் சிரித்த முகத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
சுரேஷ் கோபியின் இந்த செயல் மாணவர் குடும்பத்தினரை ஆத்திரமடைய வைத்தது. துக்க வீட்டில் அனைவரும் சோகத்துடன் இருக்க சிரித்த முகத்துடன் செல்பி எடுத்தது சரியல்ல என கண்டன குரல் எழுந்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...