Take a fresh look at your lifestyle.

மோடி கின்னஸ் சாதனை படைத்தாரா?

Get real time updates directly on you device, subscribe now.

அதிக முறை வெளிநாடுகளுக்கு சென்றவர் பிரதமர் மோடி என்பதால், அவரது பெயரை பரிந்துரைத்து கின்னஸ் சாதனை நிறுவனத்திற்கு காங் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு பார்லி.லோக்சபா தேர்தலில் பா.ஜ. வெற்றி பெற்றது. பிரதமராக மோடி பதவியேற்றார். இவர் பிரதமராக பதவியேற்ற 4 ஆண்டுகளில் 41 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்து 52 நாடுகளை வலம் வந்துள்ளார். இவரது வெளிநாட்டு பயணச்செலவு ரூ.355 கோடி என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், காங். செய்தி தொடர்பாளர் சங்கல்ப் அமோன்கர், தனது கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை செய்தியாளர்களுக்கு காண்பித்தார். அதில் அதிகமுறை வெளிநாடுகளுக்கு சென்றவர் பிரதமர் மோடி என்பதால், கின்னஸ் சாதனை நிறுவனத்துக்கு அவரது பெயரை பரிந்துரைத்து காங்.கடிதம் எழுதியுள்ளது. அதை உங்களுக்கு காண்பித்தேன் என்றார். பின்னர் சங்கல்ப் அமோன்கர் கூறுகையில், பிரதமர் மோடி அதிக நாடுகளுக்கு சென்றவர் என்பதை வலியுறுத்தும் விதமாக அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும். இதற்காக கின்னஸ் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...