பிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசன் நேற்று நடிகர் பொன்னம்பலத்துடன் நீண்ட நேரம் உரையாடினார். பல குறும்படங்களை போட்டு அது பற்றி விளக்கம் கேட்டார்.

ஐஸ்வர்யா சர்வாதிகாரியாக இருந்தபோது அவரை கழுத்தை பிடித்து தண்ணீரில் தள்ளியது பற்றி பேசிய பொன்னம்பலம், “அவர் அவராகவே இல்லை, வேறு வழி இல்லை என தெரியும்..

அதனால் தான் அப்படி செய்தேன். அது தவறாக இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்” என கூறினார்.

மேலும் தான் ஸ்டண்ட்மேன் என்றும், அடிபடாமல் எப்படி சண்டை போடவேண்டும் என்பது தெரியும் என கூறி ஒரு பெண்ணை அழைத்து ஐஸ்வர்யாவுக்கு செய்தது போலவே மேடையில் செய்துகாட்டினார்.

அதன்பின் கமல் பொன்னம்பலத்தின் கழுத்தை பிடித்து அழுத்துவது போல செய்தார், ஆனால் வலிக்கவே இல்லை என பொன்னம்பலம் கூறிய பிறகு தான் புரிந்தது இருவரும் நடித்தார்கள் என்று.

இந்தப் பதிவு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளலாமே!

What's your reaction?