நடிகை காஜல் அகர்வால்,  கிகி சேலஞ்ச் நடனத்தை வித்தியாசமான முறையில் செய்யலாம் என்று கூறி அதற்கானவீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

தற்போது உலகம் முழுவதும் தொற்று நோய் போல பரவி வருகிறது ‘கிகி சேலஞ்ச்’ நடன விளையாட்டு. இந்த விளையாட்டு அதாவது ஓடும் காரிலிருந்து இறங்கி காரில் பாடும் பாட்டிற்கு நகரும் காருடனே நடனமாட வேண்டும்.

அதுதான் இதோட கேம். இதனால் விபத்துகள் ஏற்பட கூடும் இந்த விளையாட்டிற்கு போலீசார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனாலும் இந்த சேலஞ்ச் கேமை பிரபலங்கள் முதல் பலரும் செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.

சமீபத்தில் நடிகை ரெஜினாவும் இந்த சேலஞச் கேமை விளையாடியுள்ளார். அதற்கான வீடியோ ஒன்றை சில நாட்களுக்கு இணையத்தில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் முன்னணி நடிகை காஜல் அகர்வாலும் இந்த விளையாட்டுப் பற்றிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஆனால் என்ன, இந்த விளையாட்டை பாதுகாப்பாகவும் செய்யலாம் என்றபடி வீல்சேரில் ஒரு நடிகருடன் இருந்தபடி செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தப் பதிவு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளலாமே!

What's your reaction?