மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சிந்தித்து கொண்டிருந்தால் நாம் வாழ்க்கையை வாழ முடியாது என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 13 ஆண்டுகள் நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. தனிப்பட்ட பிரச்சைகளால் இரண்டு ஆண்டுகள் நடிக்காமல் இருந்த நயன்தாரா இயக்குநர் அட்லி இயக்கிய ’ராஜா ராணி ’மூலம் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

அதனைத் தொடரந்து நயன்தராவின் எல்லா படங்களும் வெற்றிகரமாகஓடியது. கமர்ஷியல் படங்களில் நடித்தாலும், அவருக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார்.

நடிப்பை போல் சர்ச்சைக்கும் நயன்தாரா பெயர் போனவர். ’நானும் ரவுடிதான்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருப்பதாக வதந்திகள் பரவியது.

இதை உண்மையாக்குவதுபோல் இருவரும் அடிக்கடிநெருக்கமாக புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.

ஆனால் நயன்தாராதரப்பில் இருந்து எந்த விளக்கமும் இதுவரை கொடுக்கப்படவில்லை. நயன்தராவின் அடுத்தப்படமான கோலமாவும் கோகிலா வருகிற ஆகஸ்டு 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதற்கு அவர் கூறிய பதில்’ உலகம் உங்களை பார்க்கும் விதம் ஒவ்வொரு நாளும் மாறுபடும். நேற்று உங்களை பிடிக்காது என்று கூறியவர்கள் நாளை பிடிக்கும் என்று கூறலாம். அவர்களே இன்னும் சில நாட்களில் பிடிக்காது என்றும் கூறலாம்.

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசித்தால் நாம் வாழக்கையை நம்மால் வாழ முடியாது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ’கோலமாவும் கோகிலா’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் நயன்தாரா கலந்துகொண்டார். அப்போது காதல் தொடர்பாககேள்விகள் கேட்கப்பட்டது.

இந்தப் பதிவு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளலாமே!

What's your reaction?