சுந்தர் சி இயக்கிய ‘கலகலப்பு 2’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சுந்தர் சி அடுத்ததாக தனது கனவுப்படமான ‘சங்கமித்ரா’ படத்தை இயக்குவார் என்று கருதப்பட்டது.
ஆனால் தற்போது சிம்பு படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் ‘சங்கமித்ரா’ மேலும் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான பவன்கல்யாண் நடித்த அத்தாரிண்டிகி தாரேதி’ என்ற படத்தின் தமிழ்ரீமேக் உரிமையை கடந்த சில மாதங்களுக்கு முன் லைகா நிறுவனம் வாங்கியது.
இந்த படத்தில் அஜித் அல்லது விஜய் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன்கல்யாண், சமந்தா, ப்ரணிதா, நதியா நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான இந்த படம் 4 நந்தி விருதுகள் உட்படப் பல்வேறு விருதுகளையும் வென்றது.
மேலும், இந்தி, கன்னடம், பெங்காலி மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பதிவு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளலாமே!

What's your reaction?