கடந்த வருடம் அதிக   உடல் எடையுடன்  காணப்பட்ட இசையமைப்பாளர் இமான், தற்போது உடல்  எடையை அதிரடியாக குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.
இந்த மாற்றம் எப்படி சாத்தியமானது என்பதை  இமான் தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.
பள்ளி செல்லும் போதிருந்தே உடலை பிட்டாக வைக்கவேண்டும் என இமானுக்கு ஆசையாம், ஆனால் அப்போது அவர் பள்ளிக்கு செல்வதுடன்,  மியூசிக் ரெகார்டிங் செல்வது என பிஸியாக இருந்ததால் உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்கவில்லை.
ஒரே இடத்தில் பல மணி நேரங்கள் அமர்ந்து பணியாற்றியதால் உடல் பருமன் அதிகரித்துவிட்டது என அவர் கூறியுள்ளார்.
“கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து உடற்பயிற்சி, ஒழுங்காக டயட் எடுத்துக்கொண்டதால் தற்போது இப்படி மாற்றியுள்ளேன். அப்போது 117 கிலோ இருந்த நான் 42 கிலோ எடை குறைத்து 75 கிலோவாக குறைத்துள்ளேன்” என இமான் கூறியுள்ளார்.

இந்தப் பதிவு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளலாமே!

What's your reaction?