அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படத்தை அடுத்து இயக்குனர் சிவா, அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

கார்த்தியை வைத்து ‘சிறுத்தை’ படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. அதையடுத்து அஜீத்தை வைத்து ‘வீரம்’ அடுத்ததாக ‘வேதாளம்’ ஆகிய ஹிட் படங்களை கொடுத்தவர்.

அஜீத்தை வைத்து மூன்றாவதாக இயக்கிய ‘விவேகம்’ தோல்வியடைந்தது. இதனால் சிவா மீது அஜீத் ரசிகர்கள் கோபத்தில் இருந்தனர். அந்த நேரத்திலும் அஜீத் அவர் மீது வைத்த நம்பிக்கையை இழக்காமல் நான்காவது படத்தையும் இயக்க வாய்ப்பு கொடுத்தார். அந்தப்படம்தான் ‘விஸ்வாசம்’.

இந்நிலையில் ‘விஸ்வாசம்’ படத்தை இயக்கி முடித்தப்பிறகு, இயக்குனர் சிவா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் பதிவு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளலாமே!

What's your reaction?