தெலுங்கில் பிரபல கவர்ச்சி நடிகையான ஸ்ரீ ரெட்டி, அடுத்ததாக தமிழ் படங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கு கவர்ச்சி நடிகை ஸ்ரீ ரெட்டி, தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த பிரபலங்கள் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி, தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக பலர் மீது குற்றம் சுமத்தினார்.

தெலுங்கு சினிமாவையே கதிகலங்க வைத்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ் நடிகர்களை குறிவைத்து நடிகை ஸ்ரீ ரெட்டி தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் ஏ.ஆர்.முருகதாஸ், ஸ்ரீ காந்த், ராகவா லாரான்ஸ் உள்ளிட்டோர் தனக்கு வாய்ப்பு வழங்குவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் நடிகை ஸ்ரீ ரெட்டி புகார் ஒன்றை அளித்தார்.

இந்நிலையில், நடிகை ஸ்ரீ ரெட்டி பேஸ்புக் லைவ்வில் ரசிகரகளின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அதில், அவர் இனி தெலுங்குப் படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும், தமிழில் மட்டுமே நடிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழில் தமக்கு நிறைய படவாய்ப்புகள் வருவதாகவும் கூறினார்.

 

இந்தப் பதிவு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளலாமே!

What's your reaction?