நடிக்க உள்ள அடுத்த படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளார் என்றும் அதன் இயக்குநர் யார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியானது.

ஏற்கெனவே சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பலரது பாராட்டைப் பெற்ற இயக்குனர் அஜித்துக்கு ஒரு கதை எழுதியுள்ளாராம்.

கதையைக் கேட்ட அஜித்தும் ஒகே சொல்லிவிட்டாராம். ஆனால் தயாரிப்பாளரான போனி கபூர் ஹிட்டான படம் ஒன்றின் ரீ மேக் படத்தை உருவாக்கலாம் என்று அஜித்திடம் கூறிவருகிறாரம்.

 

இந்தப் பதிவு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளலாமே!

What's your reaction?