ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீபிரியா , கூறுகையில், ரஜினி, கமல் ஆகிய இருவருடன் நடித்துள்ளேன்.
கமல் தீர்க்கமான முடிவெடுப்பவர் என்பதால் அவரது கட்சியில் இணைந்தேன் என்றார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,  ‘கமல் ஹாசன் கட்சியைத் துவக்கியபோது, படித்தவர்கள் மத்தியிலும், பெருநகரத்தில் வசிப்பவர்கள் மட்டுமே கமலை ஆதரிப்பார்கள் என்று கூறப்பட்டது.
ஆனால், அவ்வாறு இல்லாமல் கிராமங்களில் வசிப்பவர்களும் பெருமளவில் ஆதரிக்கிறார்கள்.
திமுக தலைவர் கருணாநிதி இருந்த போதும், தற்போது இல்லாத நிலையிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி, மாற்றம் என்கிற ஒரே பாதையில் சென்று கொண்டிருக்கிறது
மக்கள் நீதி மய்யம் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும். கட்சிக்கு பெண்களின் ஆதரவு அதிகமாக  உள்ளது’ என்றார்.

இந்தப் பதிவு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளலாமே!

What's your reaction?