விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, 60 எபிசோடுகளுக்கு மேல் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

பிக்பாஸ் இரண்டாவது சீசன் சுமாராகத்தான் இருக்கிறது என்ற வாதங்கள் அடிக்கடி வருகின்றன. இந்த சீசனின் போட்டியாளர்கள் உண்மையாக இல்லை என்ற குற்றச்சாட்டை கமல்ஹாசன் உட்பட அனைவரும் முன் வைக்கின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் குறித்து நடிகை ஓவியாவிடம், டுவிட்டரில் கேள்வியெழுப்பிய ரசிகர் ஒருவர், ”பிக்பாஸ் வீட்டில் உங்களது இடத்தை யாரும் நிரப்பவில்லை.

இருப்பினும் மும்தாஜ் நேர்மையாக இருக்கிறார். நீங்கள் தான் லெஜண்ட் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை ஓவியா, பிக்பாஸ் வீட்டில் என்னதான் நடக்கிறது என்றும், என்னவோ அனைத்தும் நன்றாக சென்றுக் கொண்டிருக்கும் என்று நம்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளலாமே!

What's your reaction?