சினிமா பாடகர் உன்னி மேனன்,தனது மகன் திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை, கேரள மக்களுக்கு நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

ரோஜா படத்தில் ’புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’, கருத்தம்மா படத்தில் ’போறாளே பொன்னுத்தாயி’, ரிதம் படத்தில் ’நதியே நதியே காதல் நதியே உள்ளிட்ட பல பாடல்களை பாடியவர் பிரபல பின்னணி பாடகர் உன்னிமேனன்.

இவரது மகன் அங்குர் உன்னிக்கும் தூபாயை சேர்ந்தகவிதாவுக்கும்அடுத்த மாதம் 20ஆம் தேதி திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

கேரள மாநிலத்தில், கடுமையான மழை பெய்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

தற்போது வெள்ளம் வடிந்தாலும், இயல்பு நிலைக்கு திரும்ப இயலாத சூழ்நிலை அங்கு நிலவுகிறது. இதனால் பாடகர் உன்னிமேன்ன தனது மகனின்திருணத்தை எளிமையாக நடத்த முடிவெடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் ’எனது மகன் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த கடந்த 9 மாதங்களாக ஏற்பாடுகள் செய்திருந்தோம்.

ஆனால் இப்போதுமழை வெள்ளத்தால் கேரள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் எனது மகன் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த நான் விருமப்வில்லை.

ஏற்கனவே முடிவு செய்த நாளில் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் எளிமையாக திருமணம் நடைபெறும்.திருமணத்திற்கு சேமித்த பணத்தைகேரளமுதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளோம்’ என்று கூறினார்.

 

இந்தப் பதிவு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளலாமே!

What's your reaction?