கோடிக்கணக்கில் ஹிட்ஸை குவிக்கும் விஜய் படங்கள்- என்னென்ன படம் எவ்வளவு கோடி ஹிட்ஸ் முழுவிவரம்

விஜய் படம் வருகின்றது என்றாலே திரையரங்குகளுக்கு திருவிழா தான். பாக்ஸ் ஆபிஸில் இவருடைய படங்கள் பட்டையை கிளப்பும்.

ஆனால், தற்போதெல்லாம் விஜய் படங்கள் திரையிலிருந்து சென்றும் யு-டியூபையும் அதிர வைத்து வருகின்றது. விஜய்யின் பல படங்கள் ஹிந்தியில் டப் செய்து வெளியிட்டுள்ளனர்.

அந்த படங்களும் கோடி, கோடியாக ஹிட்ஸ் பெற்று விஜய்க்கு வட இந்தியாவில் பெரிய ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கியுள்ளது. இதோ…

  1. தெறி- 5 கோடி ஹிட்ஸ்
  2. பைரவா- 4.4 கோடி ஹிட்ஸ்
  3. சுறா- 3 கோடி ஹிட்ஸ்
  4. புலி- 2.8 கோடி ஹிட்ஸ்
  5. வேட்டைக்காரன்- 1.8 கோடி ஹிட்ஸ்
  6. துப்பாக்கி- 1.3 கோடி ஹிட்ஸ்

தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல காதல் ஜோடிகளுக்கும் இன்று ஒரு ஸ்பெஷல்!

நடிகர் தனுஷ் இப்போது ஹாலிவுட் பட உலகம் வரைக்கும் தனது திறமையை எடுத்து சென்றுவிட்டார். விரைவில் அவரின் நடிப்பில் The extraordinary journey of the fakir வரவுள்ளது.

பா.பாண்டி படத்தின் அடுத்த தொடர்ச்சி பற்றிய தகவலும் அண்மையில் வந்தது. அவருக்கு ரசிகர்கள் வட்டாரம் பெருமளவில் உள்ளதால் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

ஆனால் இந்த நாள் அவரின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல காதலர்களுக்கு ஒரு ஸ்பெஷலான நாள். தனுஷ், அமிரா தஸ்தூர் நடிப்பில் வந்த அனேகன் கடந்த 2015 ல் இதே நாளில் தான் வந்தது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் இப்படத்தின் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. தொடுவானம் பாடல் இன்னமும் பலரின் ரொமான்ஸ் ஃபீல் ஃபிளேவர் தான்.

படம் இன்று மூன்றாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தை எட்டுகிறது.

ஹரிஷ், ரைசா படத்தில் யுவன் கொடுக்கும் செம ஸ்பெஷல்! ரகசியம் இதுதானாம்

ஹரீஷ், ரைஸா இருவரும் நம் அனைவருக்கும் நன்கு அறிமுகமான முகங்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இருவரும் நண்பர்களாகி கடைசிவரை பயணித்தார்கள்.

இப்போது இளன் இயக்கும் பியார் பிரேமா காதல் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்து வருகிறார்கள். இப்படத்தின் High on love என்ற பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளது.

காதலர் தினம் ஸ்பெஷலாக வெளியாகும் இப்பாடல் மேற்கத்திய இசை பாணியில் அமைந்த மெலோடி பாடலாம். பெண்ணை பார்த்து காதல் வயப்பட்ட ஹீரோ தன் காதலியை வர்ணிக்கும் வார்த்தைகளாக இருக்குமாம்.

யுவன் இசையமைப்பு என்றால் சொல்லவா வேண்டும். காதல் பாடல்கள் என்றால் அவருக்கு கைவந்த கலையாயிற்றே. அதிலும் மறுவார்த்தை பேசாதே பாடல் மூலம் நம் மனங்களை கவர்ந்த சித் ஸ்ரீ ராம் தான் இந்த லவ் பாடலை பாடியுள்ளாராம்.

கணவருக்கு கொடுத்த முதல் பரிசு, சொதப்பிய மணிமேகலை- அப்படி என்ன செய்தார் தெரியுமா?

கடந்த வருடம் ரசிகர்களிடம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது தொகுப்பாளினி மணிமேகலையின் திடீர் பதிவு திருமணம்.

அவரின் அந்த அதிரடி திருமணத்திற்கு பின் என்ன விஷயம் என்று அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அண்மையில் இவர் திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது பற்றி பேட்டி கொடுத்துள்ளனர்.

அப்போது பேசிய மணிமேகலை, ஹுசைனுக்கு நான் கொடுத்த முதல் பரிசு என்னால் மறக்க முடியாது. நாம் கொடுக்கப்போகும் முதல் பரிசு அவருக்கு பிடித்த மாதிரி இருக்கனும் என்று நினைத்து நிறைய தேடினேன்.

பல யோசனைக்கு பிறகு அவர் ஐ போன் வைத்திருப்பதால் ஐ வாட்ச் யூஸ் செய்வார் என்று அதை வாங்க நினைத்தேன். ஆனால் அவர் வாட்ச் எல்லாம் பயன்படுத்த மாட்டாராம். முதல் பரிசுலேயே நான் சொதப்பல் வாங்கிட்டேன் என்றார்.

தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது?

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங் இயக்கத்தில் திரைக்கு வந்த படம் பத்மாவத். இப்படம் ரசிகர்களிடம் பிரமாண்ட வரவேற்பை பெற்றது.

மேலும், இப்படம் தமிழகத்தில் தற்போது வரை ரூ 18 கோடி வசூல் செய்துள்ளது, தமிழ் படங்கள் கூட இந்த வருடம் இத்தனை லாபம் கொடுத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ரூ 20 கோடி வசூலுடன் தமிழகத்தில் டப் செய்யப்பட்ட ஹிந்திப்படங்களில் தங்கல் தான் முதலிடத்தில் உள்ளது.

இதை பத்மாவத் முறியடிக்குமா? என்பது சந்தேகம் தான், ஏனெனில் பல திரையரங்குகளில் படத்தை எடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

தமிழ் சினிமாவில் விஜய்யின் மெர்சல் படம் செய்த முதல் சாதனை- போட்றா வெடிய கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள் அவரின் மெர்சல் படத்திற்கு எப்படிபட்ட வரவேற்பு கொடுத்தார்கள் என்பது நமக்கு தெரியும். படமும் வசூலை தாண்டி பல விஷயங்களால் மக்களை கவர்ந்திருந்தது.

இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் என்ற லிரிக் வீடியோ பாடல் 40 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் லிரிக் வீடியோ பாடலை 40 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த முதல் பாடல் இதுதானாம்.

இதனால் வழக்கம் போல் ரசிகர்கள் #AalaporaanThamizhan, #aalaporaanthamizhanhits4crviews போன்ற டாக்குகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தேசிய விருது இயக்குனருடன் ரஜினிகாந்தின் அடுத்தப்படம்- அதிர வைக்கும் கதைக்களம்

ரஜினிகாந்த் காலா படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்துக்கொடுத்துவிட்டார். படமும் ஏப்ரல் மாதம் திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.

இதை தொடர்ந்து 2.0 வர, அதன் பிறகு ரஜினி அரசியலில் இறங்கிவிடுவாரா? அல்லது ஒரு சில படங்களில் நடிப்பாரா? என்ற குழப்பம் நீடித்து வருகின்றது.

இந்நிலையில் காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் ‘கடைசி விவசாயி’ என்ற கதையை உருவாக்கியுள்ளார், விவசாயிகளின் பிரச்சனையை இது பேசுமாம்.

இப்படத்தில் ரஜினிகாந்த் நடித்தால் தான் தற்போது சரியாக இருக்கும், அப்போது தான் இந்த பிரச்சனை உலகம் முழுவதும் தெரியும் என்று மணிகண்டன் விருப்பப்பட, ரஜினி சம்மதிப்பாரா? பார்ப்போம்.

தங்கல் சாதனையை முறியடித்த பத்மாவத்- பிரமாண்ட வசூல் சாதனை

அமீர்கான் நடிப்பில் வெளிவந்து ரூ 2000 கோடி வரை வசூல் செய்த படம் தங்கல். இப்படம் சென்னையில் மட்டுமே ரூ 4.5 கோடி வரை வசூல் செய்தது.

இந்நிலையில் சமீபத்தில் திரைக்கு வந்த பத்மாவத் சென்னையில் ரூ 4.9 கோடி வரை வசூல் செய்து தங்கல் சாதனையை சென்னையில் முறியடித்துள்ளது.

மேலும், ஹிந்தி படங்களுக்கு தொடர்ந்து சென்னையில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜுலிக்கு, விஜய் கொடுத்த பெரிய வாய்ப்பு- சூப்பர் நியூஸ்

விஜய்-முருகதாஸ் படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க, கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். இப்படம் எப்படிபட்ட கதை, விஜய் லுக் எப்படியிருக்கும், அவர் பெயர் என்ன என பல விஷயங்களை அரிய ரசிகர்களும் ஆர்வமாக இருக்கின்றனர்.

தற்போது படக்குழு தகவல்களை வெளியிடுவதை விட படப்பிடிப்பில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிக்பாஸ் புகழ் ஜுலி நடித்து வருகிறாராம்.

இந்த தகவல் ரசிகர்களுக்கு ஒரு புது தகவல்கள் என்றே சொல்லலாம்.

ரஜினியின் காலா படத்தின் முக்கிய காட்சி லீக்- அதிர்ச்சியில் படக்குழு

ரஜினி நடிப்பில் அடுத்தடுத்து காலா, 2.0 என இரண்டு படங்கள் வெளியாக இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்த இரண்டு படங்களில் எந்த படம் முதலில் வரும் என ரசிகர்கள் பெரிய குழப்பத்தில் இருந்தனர்.

இறுதியில் ரஞ்சித் இயக்கும் காலா படம் தான் ஏப்ரல் 27ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்தது.

இந்த நிலையில் காலா படத்தின் சண்டைக் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் லீக்காகி உள்ளது. அதில், ரஜினி வில்லன் ஒருவரைத் தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது. 25 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவை பார்த்த படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர்.