பலரின் கவனத்தை ஈர்த்த அக்‌ஷய் குமார், ராதிகா ஆப்தேயின் பேட் மேன்! பாக்ஸ் ஆஃபிஸ் வசூல்

ஹிந்தி சினிமாவில் இப்போதெல்லாம் ஒரு படம் ரூ 100 கோடியை தாண்டுவது சாதாரணமான விசயமாகிவிட்டது. சில பிரபலங்களின் படங்கள் அதையும் தாண்டு சாதனைகள் செய்து வருகிறது.

அண்மையில் அக்‌ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் நடிப்பில் பெண்களின் மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை மையப்படுத்திய கதையை கொண்டது.

இந்நிலையில் இப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் கடந்த இரண்டு நாட்களில் மொத்தம் ரூ 23.94 கோடியை வசூல் செய்துள்ளது. இப்படத்தின் இரண்டாம் நாளில் முதல் நாள் வசூலான ரூ 10.26 கோடியை தாண்டி ரூ 13.68 கோடியை எட்டியுள்ளது.

2.0 படத்தை காலா முந்த காரணம் இதுதானாம்! வெளியான தகவல்

சூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி ரஞ்சித் இயக்கியுள்ள காலா வரும் ஏப்ரல் 27 ல் வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ தகவல் படக்குழுவால் வெளியிடப்பட்டது.

ஆனால் முன்பே இதே மாதத்தில் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படம் வெளியாவதாக இருந்தது. இவ்விரு படங்களையும் வெளியிடுவது லைகா நிறுவனம் தான்.

2.0 இன்னும் படத்தின் கிராபிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப வேலைகள் நிறையவுள்ளது. இந்த விசயங்களில் சில எப்படியோ கசிந்து வேறு படங்களில் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் சங்கரும் மிகுந்த கவனத்துடன் படத்தை பார்த்து பார்த்து செய்து வருவதால் கொஞ்சம் கூடுதலாக கால அவகாசம் தேவைப்படுகிறதாம்.

படம் தள்ளிப்போன விசயத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியாக உடனே அதே மாதத்தில் அந்த நிறுவனம் காலா படத்தை வெளியிட முடிவு செய்துவிட்டதாம். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் நடிகை சமந்தா!

நடிகை சமந்தா பல ஹிட் படங்களை கொடுத்தவர். தற்போது சிவகார்த்திகேயன், விஷால், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்களில் நடித்து விட்டார். மேலும் மகாநதி படத்திலும் நடித்துள்ளார்.

நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதற்கு முன்பே இருவரும் இணைந்து ஏ மாய சேசாவே படத்தில் நடித்தார்கள். தற்போது மீண்டும் அப்படி ஒரு நிகழ்வு நடக்கப்போகிறதாம்.

சமீபத்தில் இயக்குனர் சிவா நிர்வானா ஒரு ரொமான்ஸ் கதையை சைதன்யாவிடம் கூறியுள்ளார். இதை கேட்டு இம்பிரஸ் ஆன அவர் ஹீரோயின் கதாபாத்திரத்தில் சமந்தாவே நடிக்கட்டும் என கூறிவிட்டாராம்.

சமந்தாவும் ஓகே சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு வந்த சோதனை!

நாடு முழுக்க பலத்தை ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றவர் நடிகை சன்னி லியோன். அவரை பார்த்து மற்ற நடிகைகளுக்கே பொறாமை என்று சொல்லலாம். பாலிவுட் சினிமாவில் இவருக்கான வரவேற்பு மிகவும் அதிகம்.

கவர்ச்சி படங்களில் நடிப்பதால் பல சர்ச்சைகளில் அடிபட்டார். தற்போது தமிழில் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் பட பூஜைகள் அண்மையில் நடந்தது.

இதற்காக சென்னை வந்த அவர் ஒரு நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதியில் நடைபெற இருந்த இந்த நிகழ்ச்சிக்கு தடை கேட்டு சமூக ஆர்வலர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் கூட பெங்களூரில் புத்தாண்டை ஒட்டி ஒரு பொது நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை சந்திக்க இருந்தார். அப்போதும் இதே போல சர்ச்சையாகி அந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது.

முக்கிய பிரபலத்தை சந்திக்கும் கமல் ஹாசன்! எழுச்சி ஆரம்பம்

நடிகர் கமல்ஹாசன் பல விசயங்களுக்கு சமூகத்தில் குரல் எழுப்பி வருகிறார். இப்போது நேரடியாக களத்தில் இறங்க தயாராகிவிட்டார்.அவரின் அரசியல் முன்பே ஆரம்பமானாலும் அவரின் புது வருகைக்கு எதிர்ப்பார்ப்பு அதிகம்.

தற்போது தமிழ்நாட்டில் அவரின் அரசியல் வருகைக்கும் சினிமா தரப்பிலும் இளைஞர்கள் தரப்பிலும் ஆதரவு அதிகரித்து வருகிறது. வரும் ஃபிப்ரவரி 21 ல் அவர் தன் சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

இதற்காக அவர் மூத்த அரசியல் வாதியான கலைஞர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற திட்டமிட்டுள்ளாராம். இதற்காக தேதி கேட்டு கமல் தரப்பு தூது அனுப்பியுள்ளதாம்.