உலகம்

அமெரிக்காவில் வெள்ளை இனத்தவர்களின் எண்ணிக்கை குறைகிறது: அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவில் வெள்ளை இனத்தவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது, இதற்கு பொருளாதார வீழ்ச்சியே காரணம் என சமூகவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் சிறுபான்மை இனத்தவரான ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கீசிய மொழி இனம் சார்ந்த ஹிஸ்பேனியரிடம் குழந்தை பிறப்பு குறைந்து வருவதால், அவர்கள் தமது சிறுபான்மை அந்தஸ்தை இழந்து வருகின்றனர். வெள்ளை இனத்தவரான இந்த ஹிஸ்பேனிய இனத்தவரின் குழந்தை பிறப்பு விகிதம் 2008ஆம் ஆண்டு முதல் குறைந்து கொண்டே வருகின்றது என்று நியூ ஹேம்ப்ஷயர் பல்கலைகழகத்தின் கென்னத் ஜான்சன் தெரிவித்தார். (more...)...
Read more

ஈரான் மீது போர் தொடுப்போம்: அமெரிக்கா எச்சரிக்கை

அணு ஆயுத தயாரிப்பை நிறுத்திக் கொள்வதாக ஈரான் உறுதி அளிக்கவில்லை என்றால், ஈரான் மீது போர் தொடுப்போம் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் டேனியல் ஷாப்பிரோ கூறுகையில், இராணுவத் தாக்குதல் நடத்தாமல் வேறு சில கெடுபிடிகள் மூலமாகவே ஈரானை பணிய வைக்க முடியும். ஆனால் அவ்வாறு ஈரான் பணியவில்லை என்றால் ஈரானை தாக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன என்றார். (more...)...
Read more

பிரான்சில் யூதப் படுகொலைகளை நிகழ்த்தியவர் பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியீடு

பிரான்சில் கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி முகமது மீரா பற்றிய திடுக்கிடும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. பிரான்சின் தலைநகர் பாரீசில் கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி முகமது மீரா என்பவன் 3 இராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றான். அதன் பின்னர் 4 நாட்கள் கழித்து யூதர் இனத்தை சேர்ந்த ரப்பி என்பவரையும் அவரது 2 மகன்களையும் பள்ளியில் வைத்து சுட்டு கொன்றான். (more...)...
Read more

மகனுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண்

குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காலவரையற்ற நிலையில், மனநல மருத்துவமனையில் அடைக்கும் படி பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரிட்டனில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த பெண் ராதிகா சர்மா(வயது 35). இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் லண்டன் கிழக்கு பகுதியில் உள்ள ஸ்ராட்போர்ட் ரயில் நிலையத்தில், தன் ஐந்து வயது மகனுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். (more...)...
Read more

பிரான்ஸ் அமைச்சர்களின் சம்பளம் குறைப்பு: ஜனாதிபதி ஹோலண்டே அதிரடி

பிரான்ஸ் ஜனாதிபதியின் புதிய கேபின்டில் அமைச்சர்களின் சம்பளத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக ஐரோப்பிய மண்டலத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட நாடுகள் கடும் நிதி தள்ளாட்டத்தில் உள்ளன. இந்த சூழ்நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இதில் புதிய ஜனாதிபதியாக சோஷியலிஸ்ட் கட்சியின் பிராங்கோய்ஸ் ஹோலண்டே வெற்றி பெற்றார். (more...)...
Read more

ஒபாமாவை விவாகரத்து செய்ய மிஸ்செலி முடிவு

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் குடும்ப நண்பர் எட்வர்டு கிலெய்ன் தி அமெச்சூர் என்ற தலைப்பில், ஒபாமா பற்றியும் ஒபாமாவின் வாழ்க்கை பற்றியும் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் கூறப்பட்டு இருப்பதாவது, ஒபாமாவும் மிஸ்செலியும் திருமணம் செய்ததும் அவர்களது ஆரம்ப கால வாழ்க்கை சுமூகமாக இருந்தது. (more...)...
Read more

பாகிஸ்தானில் விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

பாகிஸ்தானில் இரு விமானப்படை விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் விமானிகள் நால்வர் பலியாயினர், மேலும் தரையில் நடந்து கொண்டிருந்த ஐந்து பேர் காயமடைந்தனர். ரிசால்பூர் நகருக்கு அருகிலுள்ள விமானப்படை கல்லூரியிலிருந்து புறப்பட்ட இந்த விமானங்கள், நவ்ஷேரா நகரில் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டது. (more...)...
Read more

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சொத்து மதிப்பு 80 லட்சம் டாலர்

அமெரிக்க அதிபர் ஒபாமா நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் மிச்செல்லியை திருமணம் செய்தபிறகு கடின உழைப்பால் பல மடங்கு முன்னேற்றம் அடைந்தார்.
கடந்த 2000-ம் ஆண்டு ஒபாமா தீவிர அரசியலில் குதித்தார். அப்போது நடந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். இதற்கு மிச்செல் எதிர்ப்பு தெரிவித்தார்.
...
Read more

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை திரைப்படமாகிறது

கம்ப்யூட்டர் உலகில் மட்டுமின்றி ஐபாட், ஐபேட் உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவராவார். இவர் கடுமையான உழைப்பாளியாக இருந்தது மட்டுமின்றி புதுமையான சிந்தனைகளை கொண்டவராக இருந்தார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி புற்றுநோயால் இறந்து போனார்.
...
Read more

அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் தீவுகளுக்கு அருகில் அகதிகளை ஏற்றிய படகு ஒன்று இடைமறிக்கப்பட்டுள்ளது

அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் தீவுகளுக்கு அருகில் அகதிகளை ஏற்றிய படகு ஒன்று இடைமறிக்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது (more...)...
Read more