ஆழ்ந்த வருத்தத்துடன் விராட் கோஹ்லி !… மன்னிப்பும் கோரினார்…

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணியின் தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார்

வலுவற்ற பந்துவீச்சு, நிலைத்தன்மை இல்லாத பேட்டிங் ஆகியவை இந்த முறை ஆர்சிபி அணியின் மோசமான செயல்பாட்டுக்கு முக்கியக் காரணமாக அமைந்தன.

அணியின் தோல்விக்குப் பின் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காமல் கேப்டன் விராட் கோலி இருந்து வந்தார்.

11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, இந்த முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமலே போட்டியில் இருந்து வெளியேறியது.

14 போட்டிகளில் பங்கேற்று விளையாடிய ஆர்சிபி அணி 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தைப் பிடித்தது.

எங்களால் நினைத்த அளவுக்கு 11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் சிறப்பாக விளையாட முடியவில்லை.

இந்த சீசன் மிகச் சிறப்பாகச் சென்றது என்று கூறும் அளவுக்கு நாங்கள் பெருமைப்படவில்லை.

நாங்கள் விளையாடிய விதம் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது, காயப்படுத்தி இருக்கிறது.

ஆர்சிபி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எங்களால் விளையாட முடியாததை நினைத்து வேதனைப்படுகிறேன். ரசிகர்களிடம் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...