பௌத்த தேரர் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை

30

கதிர்காமம், கிரிவெஹேர ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி ருகுணு மாகம்பத்து பிரதான சங்கநாயக்க கொபவக தம்மிந்த தேரர் மீதும் மற்றொரு தேரர் மீதும் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் பல்கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம், நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விகாரைக்குள் நுழைந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் மூவர், தேரர்கள் இருவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த தேரர்கள் இருவரும், ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...